சென்னை, சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே, வாரத்தில் நான்கு நாட்களுக்கு, 'வந்தே பாரத்' சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில் முதல்முறையாக கோவில்பட்டியில் நின்று செல்கிறது. எழும்பூரில் இருந்து வரும் 11, 12, 13, 14, 18, 19, 20, 21ம் தேதிகளில், அதிகாலை 5:00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில், அதே நாளில் மதியம் 1:50 மணிக்கு நாகர்கோவில் செல்லும்நாகர்கோவில் இருந்து 11, 12, 13, 14, 18, 19, 20, 21ம் தேதிகளில், மதியம் 2:20 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில், அதே நாளில் இரவு 11:00 மணிக்கு எழும்பூர் வரும்.எட்டு பெட்டிகளை கொண்டுள்ள இந்த ரயில், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நிற்கும். டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது. பயணியரின் தொடர் கோரிக்கை காரணமாக இந்த ரயில் முதல்முறையாக கோவில்பட்டியில் நின்று செல்கிறது. ரயில் சேவையில் மாற்றம்
ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்ட்ரல் - அரக்கோணம் தடத்தில் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரக்கோணம் - ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டா தடத்தில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள், வரும் 7ம் தேதி நடக்கின்றன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. திருத்தணி - அரக்கோணம் இரவு 11:10 மணி ரயில் இன்றும், 6ம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது சென்ட்ரல் - திருத்தணி இரவு 8:10 மணி ரயில் இன்றும், 6ம் தேதியும் அரக்கோணம் வரை மட்டுமே இயக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.