உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆட்டோ கட்டணம் உயர்வு கோரி சி.ஐ.டி.யு., போராட்டம் அறிவிப்பு

ஆட்டோ கட்டணம் உயர்வு கோரி சி.ஐ.டி.யு., போராட்டம் அறிவிப்பு

சென்னை, ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடத்த உள்ளதாக, சி.ஐ.டி.யு., ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.இந்த அமைப்பின் செயல் தலைவர் பாலசுப்ரமணியம் கூறியதாவது: சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கு, 2013ம் ஆண்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதன் படி, 1.8 கி.மீ துாரத்திற்கு 25 ரூபாய், அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா 12 ரூபாய், காத்திருப்பு கட்டணம் ஐந்து நிமிடத்துக்கு 3.50 ரூபாய், இரவு நேரத்தில் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கலாம் என, போக்குவரத்துத் துறை நிர்ணயித்தது. இதன் பின், 11 ஆண்டுகளாக கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை. அரசு அறிவித்தபடி, டிஜிட்டல் மீட்டரும் வழங்கவில்லை. எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்ய கமிட்டியும் அமைக்கவில்லை. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால், தமிழக போக்குவரத்து துறை இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், ஆட்டோ முன்பதிவு செயலி அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி வரும் 26ம் தேதிக்கு பின், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மறியல் என தொடர் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை