உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகர பேருந்தில் மயங்கி விழுந்து நடத்துனர் பலி

மாநகர பேருந்தில் மயங்கி விழுந்து நடத்துனர் பலி

பூக்கடை, சென்னை, ஆயிரம்விளக்கு பகுதியைச்சேர்ந்தவர் பூவலிங்கம், 54. சென்னை மாநகர பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்தார். சென்னை பிராட்வேயில் இருந்து கோவளம் செல்லும் தடம் எண் 109 பேருந்தில், நேற்று பணியில் இருந்தார். பேருந்து, குறளகம் அருகே வந்த போது, பூவலிங்கம் பயணியருக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென, கண்டக்டர் பூவலிங்கம் மயங்கி விழுந்தார். ஓட்டுனர் ஜஸ்டின் சேவியர், பேருந்தை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்றார்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். எஸ்பிளனேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி