உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடற்கரை மறுசீரமைப்பு திட்டம் பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்

கடற்கரை மறுசீரமைப்பு திட்டம் பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்

சென்னை:திருவொற்றியூர், காசிமேடு, ஈஞ்சம்பாக்கம் ஆகிய மூன்று கடற்கரைகளை சீரமைக்க, தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம், சி.எம்.டி.ஏ., அனுமதி கோரியுள்ளது.கடற்கரையில் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்துவதற்கு பதிலாக, கடற்கரைகளை இயற்கை மாறாமல் சீரமைத்து, நீலக்கொடி சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கலாம் என, ஆணையம் தெரிவித்துள்ளது.சி.எம்.டி.ஏ.,வின் கடற்கரை மறுசீரமைப்பு திட்டத்தில் நடைபாதைகள், கழிப்பறைகள், இயற்கையை ரசித்தல், சேகரிப்பு வளாகங்கள், விளையாட்டு பகுதிகள், வாகன நிறுத்துமிடங்கள் ஆகியவை அடங்கும்.இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, கடற்கரை இயற்கை மாறாமல் பாதுகாக்க உத்தரவிடக்கோரி, சரவணன் என்பவர் தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.இதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், சி.எம்.டி.ஏ.,வின் கடற்கரை மறு சீரமைப்பு திட்டம் குறித்து விளக்கம் அளிக்குமாறு, சி.எம்.டி.ஏ., தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஆகியவற்றுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை