உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் ஜெயந்தி விழா துவக்கம்

கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் ஜெயந்தி விழா துவக்கம்

மேற்கு மாம்பலம், பரனுார் ஸ்ரீகிருஷ்ண ப்ரேமி சுவாமிகள் வருடாந்திர ஜெயந்தி மஹோத்ஸவம், மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபத்தில் இன்று துவங்கி 7 நாட்கள் நடக்கிறது.ஸ்ரீகிருஷ்ண ப்ரேமி சுவாமிகள், குமாரர் வேங்கட கிருஷ்ண சுவாமிகள் என்ற ஸ்ரீஹரிஜி தலைமை வகிக்கின்றனர்.தினம் காலையில் ப்ரேமிக மஹிளா மண்டலியினரின், ப்ரேமிக கிரந்த பாராயணமும், மருதாநல்லுார் சத்குரு சுவாமிகள் தலைமையில், பாகவத கோஷ்டியினரின் நாம சங்கீர்த்தனமும் நடைபெற உள்ளது. மாலையில், ஹரிஜி, ரங்கன்ஜி, விஷாகா ஹரி மற்றும் சுபத்ராஜி ஆகியோரின் பக்த விஜயம் உபன்யாசமும் நடக்கிறது.முக்கிய அங்கமாக வரும் 11ல் காலை, 100 கனபாடிகள் சேர்ந்த கநபராயணம் மற்றும் 15ல் உஞ்சவிருத்தி ராதாகல்யாணம் நடப்பதாக, அகில உலக ப்ருஹ்ம சபா தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை