மேலும் செய்திகள்
கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம்
14-Aug-2024
வீடு ஒப்படைக்காத நிறுவனத்திற்கு அபராதம்
31-Aug-2024
சென்னை, சென்னை, அசோக் நகர் மாந்தோப்பு காலனி பகுதியில், அனன்யா கிருஷ்ணா கன்ஸ்டிரக் ஷன்ஸ் நிறுவனம் சார்பில், குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் வீடு வாங்க, கே.ஆர்.அனந்தராமன் என்பவர் பணம் செலுத்தினார். இதற்கான ஒப்பந்த அடிப்படையில், வீட்டில் அடிப்படை வசதிகளை கட்டுமான நிறுவனம் முறையாக முடித்துக் கொடுக்கவில்லை. இது குறித்த வழக்கை, 2021ல் விசாரித்த ஆணையம், பணி நிறைவு சான்றிதழை ஒப்படைக்க வேண்டும், 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதியை கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தது.இந்த உத்தரவை, சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் செயல்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான மனுவை விசாரித்த ரியல் எஸ்டேட் ஆணையம் பிறப்பித்த உத்தரவு:பணி நிறைவு சான்றிதழை அளிக்காதது, அடிப்படை வசதிகளுக்கான இணைப்பின்றி வீட்டை ஒப்படைத்தது போன்ற குற்றச்சாட்டுகள் அப்படியே உள்ளன. இதில், 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதி செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகளை, கட்டுமான நிறுவனம் செயல்படுத்தவில்லை. எனவே, ரியல் எஸ்டேட் சட்ட விதிகளின் அடிப்படையில், அந்த கட்டுமான நிறுவனத்திற்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், இந்த குறிப்பிட்ட நிறுவனம் மீது, ரியல் எஸ்டேட் ஆணைய ஆலோசகர் வாயிலாக கிரிமினல் புகார் அளிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
14-Aug-2024
31-Aug-2024