உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அம்மன் கோவில்களில் ஆடி விழா விமரிசை

அம்மன் கோவில்களில் ஆடி விழா விமரிசை

திருவொற்றியூர்:திருவொற்றியூர், காட்டு பொன்னியம்மன் நகரில் காட்டு பொன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 57ம் ஆண்டு ஆடி மாத திருவிழா, 16ம் தேதி மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை அம்மனுக்கு, சிறப்பு மஹா அபிஷேகம் நடைபெற்றறது. விழாவின் முக்கிய நிகழ்வான கூழ்வார்த்தல் நிகழ்ச்சி, நேற்று மதியம் நடைபெற்றது.தொடர்ந்து, இரவு கும்பம் போடுதல், அம்மன் வீதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவில், சுற்றுவட்டார குடியிருப்பைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

மணலி

மணலி - கிராம தேவி பிடாரி ஸ்ரீ ஆயிரங்காத்தம்மன் கோவிலில் 5ம் வார ஆடித் திருவிழா, நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. அதன்படி, அரசமரம் தேவி கருமாரியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் புறப்பட்டு, ஆயிரங்காத்தம்மன் கோவில் வந்தடைந்தது.பின், மூலவர் தாயாருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. நண்பகல் 12:00 மணிக்கு, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில், மஹா தீச்சட்டி கோவிலை சுற்றி வருதல், இரவு அம்மனுக்கு கும்பம் போடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.மாலையில், அம்மனுக்கு அர்த்தநாரீஸ்வரர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இரவு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில், மணலி மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ