உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இளைஞர்களை வெட்டி வழிப்பறி

இளைஞர்களை வெட்டி வழிப்பறி

படப்பை, தாம்பரம் அருகே, வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் தினகரன், 35; திருமுடிவாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஊழியர். இவர், தன் நண்பர்கள் மணிகண்டன், 36, உள்ளிட்ட நான்கு பேருடன், வரதராஜபுரம்காலி மனையில் மது அருந்தினார்.பின், தினகரன் காரில் அனைவரும் புறப்பட்டபோது, இரண்டு பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் ஆறு பேர், காரை மறித்தனர். கத்தியால் தினகரனை தாக்கி, அவர் அணிந்திருந்த தங்க மோதிரம், செயினை பறிக்க முயன்றனர்.தடுக்க வந்த மணிகண்டனின் கையை கத்தியால் வெட்டினர். தினகரன், மணிகண்டன், உடனிருந்த நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். நகையை பறிக்க முடியாத ஆத்திரத்தில், தினகரனின் கார் கண்ணாடியை உடைத்து, மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.காயமடைந்த தினகரன், மணிகண்டன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின், சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

raja
ஜூன் 18, 2024 06:21

சட்டமடா ஒழுங்கு டா திருட்டுடா திராவிடம்டா மாடல்டா எல சின்னவ நெ எட்ரா வேண்டிய ஒன்கொள் கோவால் புறத்துக்கு


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை