உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பூண்டி நீர்த்தேக்கத்தில் செத்து மிதந்த மீன்கள்

பூண்டி நீர்த்தேக்கத்தில் செத்து மிதந்த மீன்கள்

திருவள்ளூர், சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் கொசஸ்தலை ஆறு நடுவில் சத்தியமூர்த்தி நீர்தேக்கம் 1944ல் கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு, 3,231 மில்லியன் கன அடி.கோடை வெப்பத்தால் நீர்த்தேக்கத்தில் உள்ள தண்ணீர் ஆவியாகி வருகிறது. கிருஷ்ணா நதி நீர் வரத்தும் இல்லாததால், நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இருப்பு குறைந்து கொண்டே வருகிறது.நேற்றைய நிலவரப்படி, மொத்த கொள்ளளவான, 3.23 டி.எம்.சி.,யில், 0.3 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே உள்ளது. சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, 357 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, இதே நாளில், 1.09 டி.எம்.சி., அளவிற்கு தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.நீர்த்தேக்கத்தில் தண்ணீர் மிக குறைவாக இருப்பதால், இங்குள்ள மீன்கள் செத்து, கரையோரம் மிதந்து, துர்நாற்றம் வீசுகிறது. பொதுப்பணி - நீர்வள ஆதாரத்துறையினர் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி