உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலை விபத்தில் மரணம் ரூ.23.78 லட்சம் இழப்பீடு

சாலை விபத்தில் மரணம் ரூ.23.78 லட்சம் இழப்பீடு

சென்னை, சென்னை மாவட்டம், வீராபுரம் பகுதியை சேர்ந்தவர் ராகுல், 24. 'வெல்டிங்' நிறுவன உரிமையாளர். இவர், 2021 ஜூலை12ல் மதுரையில் இருந்து தன் மாருதி காரில் வந்து கொண்டிருந்தார். திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, திடீரென திரும்பிய 'இன்னோவா' கார் மீது ராகுலின் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே ராகுல் உயிரிழந்தார்.ராகுலின் இறப்புக்கு, 45 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், அவரது பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற நீதிபதி கே.ஜோதி முன் நடந்தது. நீதிபதி தீர்ப்பு: சாலையில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வரும் வாகனங்களுக்கு எவ்வித சிக்னல் கொடுக்காமல், இன்னோவா கார் திரும்பிஉள்ளது. மேலும், அதிவேகம், அஜாக்கிரதையாக, இன்னோவா காரின் டிரைவர் இயக்கியதும், விபத்துக்கு பிரதான காரணம்.எனவே, மனுதாரர்களுக்கு 23.78 லட்சம் ரூபாய் இழப்பீடாக, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி