உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாற்றுத்திறனாளி சுவர் இடிந்து பலி

மாற்றுத்திறனாளி சுவர் இடிந்து பலி

ஓட்டேரி,திரு.வி.க.நகர் மண்டலம், ஓட்டேரி, நியூ பேரன்ஸ் சாலையில், மாநகராட்சி பொது கழிப்பறை உள்ளது. இதை இடிக்கும் பணியை, ஆர்.எஸ்.பி., என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்டது. பாண்டியன் என்பவர் மேற்பார்வையில், விழுப்புரத்தைச் சேர்ந்த குமார், 49, உள்ளிட்டோர், கழிப்பறையை இடிக்கும் பணியில், நேற்று மாலை ஈடுபட்டிருந்தார்.சுவர் துளையிடும் இயந்திரம் மூலம் கட்டடத்தை இடித்தபோது, எதிர்பாராவிதமாக குமார் மீது சுவர் விழுந்தது. இதில் படுகாயமடைந்த குமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டேரி போலீசார், குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.இதில், 'இறந்த நபர், காது கேட்காத, பேச முடியாத மாற்றுத்திறனாளி. வண்ணாரப்பேட்டை எம்.சி., சாலை நடைபாதையில் தங்கி கிடைத்த வேலைகளை செய்து வந்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன் தான் இப்பணியில் வேலைக்கு சேர்ந்துள்ளார்' என தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை