| ADDED : ஜூலை 01, 2024 01:01 AM
சென்னை:ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல் பால் சங்கம் ஆதரவுடன், செங்கல்பட்டு மாவட்டம் ரோல்பால் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டி, மறைமலர் நகர் அரசு விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது.இதில், ஓட்டோ கோச், ரோலிங் ராக்கர்ஸ், செயின்ட் ஜோசப் பள்ளி உட்பட செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கிளப் அணிகளைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட சிறுவர் -- சிறுமியர் பங்கேற்றனர்.இதில் ஒன்பது, 11, 14, 17 வயது மற்றும் 17 வயதுக்கும் மேற்பட்ட பிரிவுகளில், தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஒரு பிரிவிலும் தலா மூன்று அணிகள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தி அசத்தின. அனைத்துப் போட்டிகள் முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகளுக்கு, செங்கல்பட்டு மாவட்ட ரோல் பால் சங்கத் தலைவர் அஸ்வின் மகாலிங்கம், செயலர் தணிகைவேல் உள்ளிட்டோர் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்தனர்.இது குறித்து அஸ்வின் மகாலிங்கம் கூறுகையில், ''மாநில சங்கத்தின் ஆதரவில் மாவட்ட அளவில் போட்டி சிறப்பாக நடந்தது. ''மாநில சங்கத்தின் சார்பில் மேற்பார்வையாளர் வசந்தகுமார் பங்கேற்றார் போட்டியில் சிறப்பாக விளையாடிய சிறுவர் - சிறுமியர் மாநிலப் போட்டியில் பங்கேற்க வாய்ப்புள்ளது,'' என்றார்.