| ADDED : ஜூன் 23, 2024 01:18 AM
சென்னை:தமிழகத்தில் முதல் முறையாக, முழங்கால் காயத்திற்கு செயற்கை தசைநாண் பொருத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, ரேலா மருத்துவமனையின் தலைமை செயல் அலுவலர் இளங்குமரன் கலியமூர்த்தி கூறியதாவது:சாலை விபத்தில் சிக்கிய மணிகண்டன், 23, என்பவருக்கு, 'லிகமெண்ட்' என்ற தசைநாண் சேதத்துடன், முழங்கால் மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டது.உடலின் மற்றொரு பகுதியில் இருந்து எடுக்கப்படும், தசைநாண் பயன்படுத்தியே, பாதிக்கப்பட்ட பகுதியில் பொருத்துவது வழக்கமாக இருந்தது. இந்த சிகிச்சையில், நோயாளிகள் குணமடைவது காலதாமதம் ஏற்படுகிறது.எனவே, பிரிட்டனில் இருந்து இறுக்குமதி செய்யப்பட்ட செயற்கை தசைநாண் பயன்படுத்தி, இளைஞருக்கு ஆர்த்ரோஸ்கோபி மருத்துவ செயல்முறையில் பொருத்தப்பட்டது.இச்சிகிச்சையை, டாக்டர்கள் அசோக், கவாஸ்கர், பார்த்தசாரதி சீனிவாசன், பிரகாஷ் அய்யாதுரை ஆகிய குழுவினர், ஒரு மணி நேரம் மேற்கொண்டனர்.தற்போது, இயல்பான வாழ்க்கைக்கு அந்த இளைஞர் திரும்பியுள்ளார். தமிழகத்தில் முதல் முறையாக செயற்கை தசைநாண் பயன்படுத்தி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.