உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மயிலாப்பூரில் டி.யு.சி.எஸ்., திருமண மண்டபங்கள் தயார்

மயிலாப்பூரில் டி.யு.சி.எஸ்., திருமண மண்டபங்கள் தயார்

சென்னை, சென்னை மயிலாப்பூரில், டி.யு.சி.எஸ்., சங்கத்தின், இரு திருமண மண்டபங்களின் கட்டுமான பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கூட்டுறவு சங்கங்களுக்கு, அனைத்து மாவட்டங்களின் முக்கிய இடங்களிலும் காலி இடங்கள் உள்ளன. அவற்றை சிலர் ஆக்கிரமித்து வருகின்றனர். இதைத் தடுக்கவும், வருவாய் ஈட்டவும் காலி இடங்களில் திருமண மண்டபம், வணிக வளாகம் கட்டி, வாடகைக்கு விட கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி, டி.யு.சி.எஸ்., எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம், சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில், சிட்டி சென்டர் பின்புறம் உள்ள மாதவபுரத்தில் மண்டபம் கட்டுகிறது. தரைதளத்தில் சென்னை மத்திய கூட்டுறவு வங்கி கிளையும், முதல் தளத்தில் மண்டபமும் செயல்படும். மொத்தம், 3,500 சதுர அடியில், 1.50 கோடி ரூபாய் செலவில் கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இரண்டாவதாக, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் சித்திரைக்குளம் அருகில், 1.75 கோடி ரூபாய் செலவில், 4,250 சதுர அடியில், மண்டபம் கட்டப்படுகிறது. அதன் தரைதளத்தில் மாநில தலைமை கூட்டுறவு வங்கி கிளையும், முதல் தளத்தில் மண்டபமும் செயல்படும். கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த மாதம் முதல் திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த மண்டபங்கள் வாடகைக்கு விடப்பட உள்ளன. மாதவபுரத்தில் கட்டப்படும் மண்டப பணிகளை, கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது, டி.யு.சி.எஸ்., மேலாண் இயக்குனர் பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை