உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மரண பயத்தை ஏற்படுத்திய இ18 பேருந்து

மரண பயத்தை ஏற்படுத்திய இ18 பேருந்து

பல்லாவரம், பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து, நேற்று மாலை புறப்பட்ட 'இ18' மாநகர பேருந்து, கூடுவாஞ்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. 30க்கும் மேற்பட்ட பயணியர் இருந்தனர்.வயது 35 மதிக்கத்தக்க ஓட்டுனர், பேருந்தை தாறுமாறாகவும், வேகமாகவும் ஓட்டியுள்ளார். இதில் பீதியடைந்த பயணியர், பேருந்தை சீராக இயக்கும்படி பலமுறை கூறினர்.ஆனால் ஓட்டுனர், அது குறித்து கண்டுகொள்ளாமல், பல்லாவரம் வரை பயணியருக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் ஓட்டியுள்ளார். முன்னால் செல்லும் வாகனங்கள் அருகே சென்று 'பிரேக்' அடிப்பது, தாறுமாறாக பேருந்தை வளைப்பது போன்று ஓட்டியுள்ளார்.ஒருகட்டத்தில் பொறுமையிழந்த பயணியர், ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோபமடைந்த ஓட்டுனர், பல்லாவரம் சாலையோரம் பேருந்தை நிறுத்தி, 'இதற்கு மேல் வாகனம் செல்லாது, இறங்கி செல்லுங்கள்' எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.மேலும், 'இந்த வேலை இல்லையென்றால் ஆயிரம் வேலை இருக்கு' என, ஓட்டுனர் துடுக்குத்தனமாக பேசினார். இதனால், பல்லாவரம் ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கிருந்தோர் வீடியோ எடுப்பதை பார்த்த பின், பேருந்தை இயக்கி, கூடுவாஞ்சேரி நோக்கி சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ