உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அதிகாலை சரக்கு விற்பனை நிறுத்தம்

அதிகாலை சரக்கு விற்பனை நிறுத்தம்

குரோம்பேட்டை, ஜூலை 5-சென்னை, புறநகர் பகுதி மதுக்கூடங்களில், அதிகாலையிலேயே மது விற்பனை கொடிக்கட்டி பறக்கிறது. காலையிலேயே மது அருந்தி, கூலி வேலைக்கு செல்லாமல் போதையில் படுத்து விடுகின்றனர்.இதனால், அவர்களின் குடும்பம் பாதிக்கப்படுகிறது. மற்றொரு புறம், அதிகாலை சரக்கு விற்பனையால் குற்றங்களும் அதிகரித்துள்ளன.இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, குரோம்பேட்டை காவல் நிலைய எல்லையில் ஜி.எஸ்.டி., சாலை, எம்.ஐ.டி., மேம்பாலம் மற்றும் சானடோரியம் மேம்பாலம் கீழ், பேருந்து நிலையம் அருகில் என, மூன்று மதுக்கூடங்களில், அதிகாலை சரக்கு விற்பனை தடுக்கப்பட்டு உள்ளது.இதேபோல், தாம்பரம், சிட்லப்பாக்கம், பல்லாவரம், சங்கர் நகர், பீர்க்கன்காரணை, மணிமங்கலம், சேலையூர் பகுதிகளில் அதிகாலை சரக்கு விற்பனையை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை