உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய அதிகாரிக்கு சிறை

லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய அதிகாரிக்கு சிறை

செங்கல்பட்டு,செங்கல்பட்டு, மறைமலை நகரைச் சேர்ந்த அன்பழகன் என்பவர், பண்ணை தோட்டத்தில் மின் கம்பத்தை மாற்றக்கோரி, 2020ல் மறைமலை நகர் மின்வாரிய அலுவல உதவி பொறியாளர் நடராஜன், 57, என்பவரிடம் மனு அளித்தார்.மின்கம்பத்தை மாற்றித்தர, நடராஜன் 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அன்பழகன் தந்த ரசாயனம் தடவிய பணத்தை வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த போலீசார், நடராஜனை கைது செய்தனர்.இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயஸ்ரீ முன் நடந்தது.நேற்று நடந்த விசாரணையில், நடராஜன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தற்போது, நடராஜன் அம்பத்துார் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ