உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அமைந்தகரை கூவம் கரையோரம் கட்டட கழிவுகள் கொட்டி அத்துமீறல்

அமைந்தகரை கூவம் கரையோரம் கட்டட கழிவுகள் கொட்டி அத்துமீறல்

அமைந்தகரை, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட கூவம் கரையோரத்தில், அத்துமீறி கொட்டப்படும் கட்டட கழிவுகளை தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும், வடகிழக்கு பருவமழையால் அண்ணா நகர் மண்டலத்தில் வில்லிவாக்கம், அரும்பாக்கம், அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கால்வாய் மற்றும் கூவம் ஆக்கிரமிப்பில் வசித்து வந்தவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.இவர்களை, கூவம் விரிவாக்கம் திட்டத்தின் கீழ், ஆக்கிரமிப்பில் வசித்த மக்களுக்கு, புளியந்தோப்பில் உள்ள கே.பி., பார்க் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டு, அனைவரும் மறுகுடியமர்வு செய்யப்பட்டனர்.ஒவ்வொரு பகுதியாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்தது. மழைக்கு பின், இந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதனால், கூவம் ஆக்கிரமிப்பு மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக, அமைந்தகரை காவல் நிலையம் பின்புறத்தில் உள்ள எம்.எம்., காலனியில் கூவம் ஆறு செல்கிறது. இந்த கூவம் கரையோரத்தில், கடந்தாண்டு இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.தற்போது, இங்கு போதிய தடுப்புகள் அமைக்காததால், மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. சிலர் அத்துமீறி குப்பை மற்றும் கட்டட கழிவுகளை கொட்டி வருகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்காலங்களில் மட்டுமே கூவம் ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின் கண்டுக்கொள்வதில்லை.இதனால், கூவம் கரையோரங்களில் ஆக்கிரமிப்பு மற்றும் குப்பை கொட்டுவது உள்ளிட்ட அத்துமீறல் தொடர்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, ஆரம்பத்திலேயே ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க, தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை