உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வழிப்பறி செய்த போலி போலீஸ் கைது

வழிப்பறி செய்த போலி போலீஸ் கைது

சென்னை, கொட்டிவாக்கம், வேம்புலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமரவேல், 43; பைக் டாக்சி ஓட்டுனர். இவர், கடந்த 21ம் தேதி, கலங்கரை விளக்கம் பின்புறம் மணற்பரப்பில் உறங்கி கொண்டிருந்தார்.அங்கு வந்த நபர், போலீஸ் என தன்னை அறிமுகப்படுத்தி, குமரவேலுவை மிரட்டி அவரிடமிருந்து மொபைல் போன், 8,500 ரூபாயை பறித்துச் சென்றார்.இது குறித்து வழக்கு பதிந்த மெரினா போலீசார், திருப்பத்துார் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ், 26, என்பவர், போலீஸ் போல் நடித்து, குமரவேலுவிடம் பணம் பறித்தது தெரியவந்தது. அவரை, கைது செய்த போலீசார், 5,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ