உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சுவருடன் விழுந்த சாரம் தொழிலாளி பலி

சுவருடன் விழுந்த சாரம் தொழிலாளி பலி

அமைந்தகரை, அமைந்தகரை, அய்யாவு காலனியைச் சேர்ந்த செல்வகுமார், 45, கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். அதேபகுதியில் இவருக்கு சொந்தமான இரண்டு அடுக்கு வீட்டை கட்டி வருகிறார். கட்டடத்தின் இரண்டாவது தளத்தின் வெளிப்புறத்தில், இரண்டு வடமாநில தொழிலாளர்கள், நேற்று சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக, இரண்டாவது தளத்தில் சாரத்துடன், 10 அடி சுவரும் சேர்ந்து விழுந்ததில், தொழிலாளர் இருவரும், 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தனர். அதில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நவ்ஷத் சேக், 24 என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மேற்கு வங்க தொழிலாளி குஸ்முதீன், 22 என்பவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். புதிதாக கட்டப்பட்ட இரண்டாவது தளத்தின் சுவரில், ஈரத்தன்மை அதிகம் இருந்ததாலும், போதிய பிடிமானம் இல்லாததால், சுவருடன் சேர்ந்து சாரமும் சரிந்தது தெரியவந்தது. இதையடுத்து, கட்டுமான உரிமையாளர் செல்வகுமார் உள்ளிட்ட இருவர் மீது, அமைந்தகரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்