உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேர்தல் நேரத்தில் பொய் வாக்குறுதி: வாசன் காட்டம்

தேர்தல் நேரத்தில் பொய் வாக்குறுதி: வாசன் காட்டம்

காஞ்சிபுரம் தனி தொகுதி பா.ம.க., வேட்பாளர் ஜோதியை ஆதரித்து, த.மா.கா., தலைவர் வாசன், உத்திரமேரூரில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது, அவர் பேசியதாவது:இந்தியாவில், மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைவது உறுதி. எனினும், தமிழகத்தில் இருந்து பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்கள் லோக்சபா எம்.பி.,யாக அங்கம் வகிக்க வேண்டும் என்பதுதான் நம் இலக்கு.தி.மு.க., கடந்த சட்டசபை தேர்தலில் இதை செய்வோம், அதை செய்வோம் என, பல பொய்யான வாக்குறுதிகள் அளித்து, ஏமாற்றி ஆட்சியை பிடித்தனர்.ஆட்சிக்கு வந்ததும் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, பத்திரப்பதிவு தொகை உயர்வு என ஏழை, எளிய மக்களின் தலையில் பாரம் சுமத்தினர்.அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் பா.ஜ., தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று, இந்தியா வல்லரசாக மாற, மோடி தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ