உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண் உடல் மீட்பு

பெண் உடல் மீட்பு

திருப்போரூர், பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சரத்சந்திரன், 28; இவரது மனைவி காயத்ரி, 22. மூன்று மாதத்திற்கு முன் திருமணமான நிலையில் காயத்ரி, கணவருடன் கண்டிகையில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.நேற்று முன்தினம் காலை, சரத்சந்திரன் வேலைக்குச் சென்ற நிலையில், மதியம் 1:00 மணியளவில் மொபைல்போனில் காயத்ரியை தொடர்பு கொண்டபோதுஎடுக்கவில்லை.பெற்றோர் தேடிய நிலையில், அருகில் இருந்த கிணற்றில் காயத்ரி உடல் மிதந்துள்ளது.தகவல் அறிந்து வந்த தாழம்பூர் போலீசார், தீயணைப்பு படையினர் வாயிலாக சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி