உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பல்லாங்குழி சாலையால் எரிபொருள் விரயம்

பல்லாங்குழி சாலையால் எரிபொருள் விரயம்

ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலில், சரஸ்வதி நகர் பிரதான சாலை உள்ளது. இங்கு, 20க்கும் மேற்பட்ட தெருக்களில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் சிறு, குறு வணிக நிறுவனங்கள் உள்ளன. சரஸ்வதி நகர் பிரதான சாலை பல மாதங்களாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.குறிப்பாக, சரஸ்வதி நகர் மயானம் அருகே 100 மீட்டர் தூரம், சாலை பல்லாங்குழியாக காட்சி அளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் தினமும் பள்ளத்தில் ஏறி இறங்கி முதுகு வலியால் கடும் அவதிப்படுகின்றனர். சாலை படு மோசமாக இருப்பதால், எரிபொருள் விரையமும் அதிகரித்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மழைக்கு முன் சாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.- --சந்தோஷ், ஆவடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ