உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ராஜன் கண் மருத்துவமனையில் இலவச கருவிழி சிகிச்சைக்கு நிதி

ராஜன் கண் மருத்துவமனையில் இலவச கருவிழி சிகிச்சைக்கு நிதி

சென்னை, சென்னை, ராஜன் கண் மருத்துவமனை மற்றும் தி.நகர் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் இணைந்து, 'ஒளிமயம்' என்ற திட்டத்தை, நேற்று துவங்கின. இத்திட்டத்தின் வாயிலாக, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இலவச கருவிழி மற்றும் விழித்திரை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள, 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, மருத்துவமனையின், செயல் மருத்துவ இயக்குனர் சுஜாதா மோகன் கூறியதாவது:'கோட் ஐ கேர்' நிறுவன தலைவர்கள் டாக்டர் கீதா அய்யர், பாஸ்கர் ஸ்ரீனிவாசன் ஆகியோர், கருவிழி சிகிச்சையில் மேம்பட்ட மருத்துவ முறைகளை கையாண்டு வருகின்றனர்.குறிப்பாக, ஆசிட், கெமிக்கல் போன்றவற்றால் பாதிக்கப்படும் கண் பாதிப்பை சரி செய்தல், சுருங்கும் கண் விழித்திரை சரி செய்தல் போன்றவற்றில் நவீன உபகரணங்கள் வாயிலாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.எங்கள் மருத்துவமனையுடன் இணைந்து, பணம் இருப்பவர்கள் முதல் இல்லாதவர்கள் வரை ஒரே மாதிரியான சிகிச்சை முறையை அளித்து, பலரின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறோம். இதுபோன்ற மேம்பட்ட சிகிச்சை, ராஜன் கண் மருத்துவமனையில் மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி