உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாரிய இடத்தில் தேங்கும் குப்பை கிழக்கு அண்ணா நகரில் சீர்கேடு

வாரிய இடத்தில் தேங்கும் குப்பை கிழக்கு அண்ணா நகரில் சீர்கேடு

அண்ணா நகர், கிழக்கு அண்ணா நகரில், குடிநீர் வாரிய இடத்தில் தேங்கியுள்ள குப்பை மற்றும் கட்டட கழிவுகளால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.சென்னை, அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட கிழக்கு அண்ணா நகரில், குஜ்ஜி தெரு உள்ளது. நியூ ஆவடி சாலை அருகில் உள்ள இத்தெருவில், குடிநீர் வாரியத்திற்குச் சொந்தமாக காலி இடம் உள்ளது.இங்குள்ள காலி இடத்தில் அப்பகுதியில் வசிப்போர் குப்பை மற்றும் கட்டட கழிவுகளை அத்துமீறி கொட்டி, சீர்கேட்டை ஏற்படுத்துகின்றனர். இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதுடன், ஆக்கிரமிப்பும் அதிகரித்து வருகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்னையை கவனித்து, கட்டட கழிவு மற்றும் குப்பை கொட்டப்படுவதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:நியூ ஆவடி சாலையோரத்தில் உள்ள குடிநீர் வாரியத்தின் இடம், முழுமையாக ஆக்கிரமிப்பில் உள்ளது. இதை வாரியம் முறையாக கையாளுவது கிடையாது. இதனால், சாலையில் குப்பை கொட்டுவது, மாடுகள் வளர்ப்பது உள்ளிட்ட அத்துமீறல்கள் நடக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குப்பை மற்றும் கட்டட கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை