உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஜி. ஹெச்., ஊழியரிடம் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்

ஜி. ஹெச்., ஊழியரிடம் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்

அயனாவரம், அயனாவரம், புதுநகர் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் உதயகுமார், 39. இவர், அண்ணா நகர் அரசு புறநகர் மருத்துவமனை அலுவலக பணியாளர். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர், முகப்பேரில் துணிக்கடையும், கொளத்துாரில் குடிநீர் ஆலையும் வைத்துள்ளார்.சமீபத்தில், உதயகுமாரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், 'பிரபல ரவுடி ராதாவின் கூட்டாளி பேசுகிறேன். நீயும் மனைவியும் அதிகமாக சம்பாதிக்கிறீர்கள். எனக்கு மாதம் 2 லட்சம் ரூபாய் கொடுக்கணும், இல்லையெனில் கொலை செய்துவிடுவேன்' என மிரட்டியுள்ளார். தொடர்ந்து, வெவ்வேறு எண்களில் இருந்தும் மிரட்டல் விடுத்துள்ளனர்.இது குறித்து, உதயகுமார் அயனாவரம் போலீசில் புகார் அளித்தார். உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில், ஷெனாய் நகரசை் சேர்ந்த வினோத், 33, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.வினோத் மீது போதை பொருள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை