உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பகலில் ரயில் நிலைய கூரையில் தங்கி இரவில் மட்டும் திருடும் கில்லாடி கைது

பகலில் ரயில் நிலைய கூரையில் தங்கி இரவில் மட்டும் திருடும் கில்லாடி கைது

தரமணி, வேளச்சேரி, தரமணி, அடையாறு, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், பெட்டிக்கடைகள் மற்றும் சிறு கடைகளின் கூரையை உடைத்து, கடைக்குள் புகுந்து பணம், பொருட்கள் திருடுவது, அடிக்கடி அரங்கேறி வந்தது. இது குறித்து, ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து, தரமணி துணை கமிஷனர் உத்தரவின் படி தனிப்படை போலீசார், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.சம்பவங்கள் நடந்த இடத்தின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.இதில் அதிர்ச்சிகரமான சம்பவம் வெளியானது.சம்பவத்தில் ஈடுபட்டது அசோக் நகரைச் சேர்ந்த பழைய குற்றவாளியான காசி, 40, என்பது தெரிய வந்தது. நேற்று முன்தினம் பெருங்குடி ரயில் நிலைய கூரையில் உறங்கி கொண்டிருந்த காசியை போலீசார் கைது செய்தனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது:காசி தனி ஒருவனாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். பகலில் பெருங்குடி ரயில் நிலைய கூரை மீது ஏறி தங்குவார். இரவு 12:00 மணிக்கு மேல் இறங்கி வந்து, கூரை உடைக்கும் வகையில் உள்ள கடைகளில் புகுந்து திருடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.திருடி விட்டு, பகலில் தேவைப்படும் சாப்பாடு பொருட்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கடைகளில் வாங்கி வந்து, மீண்டும் ரயில் நிலைய கூரையில் தங்குவார். தேவையான பணம் சேர்ந்ததும், ஊர் சுற்றி ஆடம்பர செலவு செய்வார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை, காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ