சென்னை, சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள லோக்சபா தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி முதல், அந்தந்த தேர்தல் அலுவலகத்தில் நடக்கிறது.பிரதான கட்சிகளான தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., மற்றும் அக்கட்சிகளின் கூட்டணி வேட்பாளர்கள், நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து, தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தாராளமாக செலவு செய்வதற்கேற்ற வேட்பாளர்களே, பெரும்பாலான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பெயரில் மட்டும் இருக்கும் சொத்து மதிப்பு, அவர்களது வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில், வேட்பாளர்களின் அசையும், அசையா சொத்து விபரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.இதற்கு முந்தைய தேர்தலிலும், தற்போதைய தேர்தலிலும் சிலரின் சொத்து மதிப்பில் பெரிய வித்தியாசம் உள்ளது.2024 லோக்சபா தேர்தல் வேட்புமனுவில் சொத்து விபரம் குறிப்பிட்டுள்ள வேட்பாளர்கள்தொகுதி கட்சி வேட்பாளர் அசையும் அசையாத சொத்து கடன்- நமது நிருபர் குழு -வடசென்னை தி.மு.க., கலாநிதி 20.84 1.10 கோடி 26.50 கோடிவடசென்னை அ.தி.மு.க., மனோகர் 3.26 கோடி 5.91 கோடி 9.15 கோடிவடசென்னை பா.ஜ., பால் கனகராஜ் 4.06 கோடி 4.93 கோடி 2.58 கோடிதென் சென்னை தி.மு.க., தமிழச்சி 1.61 கோடி 11.34 கோடி - 1.16 கோடிதென் சென்னை அ.தி.மு.க., ஜெயவர்தன்தென் சென்னை பா.ஜ., தமிழசைமத்திய சென்னை தே.மு.தி.க., பார்த்தசாரதி 91.88 லட்சம் 67.3 லட்சம் -ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., டி.ஆர்.பாலு 1.08 கோடி ரூ. 16.19 கோடி ரூ. 1.46 கோடிஸ்ரீபெரும்புதுார் அ.தி.மு.க., பிரேம்குமார் 51.40 லட்சம் 8.02 கோடி 50.35 லட்சம்காஞ்சிபுரம் தி.முக., செல்வம் 1.67 கோடி 69 லட்சம் 31.12 லட்சம்காஞ்சிபுரம் அ.தி.மு.க., ராஜசேகர் 6.9 கோடி 25.8 கோடி 8.2 கோடி
காஞ்சி எம்.பி.,
சொத்து திடீர் சரிவு காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் செல்வம், 2014, 2019ல் போட்டியிட்டார். இந்த தேர்தலிலும் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கடந்த இரு தேர்தலைவிட இந்த தேர்தலில், அவரது சொத்து மதிப்பு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அவருக்கு 2014ல் அசையும் சொத்து 41 லட்சம் ரூபாய்; அசையா சொத்து 31 லட்சம் ரூபாய் என குறிப்பிடப்பட்டு இருந்தது. கடந்த 2019 தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட சொத்து கணக்கில், அசையும் சொத்து 76 லட்சம் ரூபாய்; அசையா சொத்து 4.2 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது, அவர் தாக்கல் செய்துள்ள சொத்துக்கணக்கின் படி, அசையும் சொத்து 1.67 கோடியாகவும், அசையா சொத்து 69 லட்சம் ரூபாயாகவும் உள்ளது. கடந்த தேர்தலை விட, தற்போது அவரது சொத்து மதிப்பு 50 சதவீதம் சரிந்துள்ளது.