உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

வியாசர்பாடி, வியாசர்பாடியில், மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.வியாசர்பாடி, சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் மணிமாறன், 42. இவர் மனைவி கவுசல்யா, 40, நுங்கம்பாக்கத்தில் வீட்டு வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, மணிமாறன் குடிபோதையில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதில் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து, கவுசல்யாவை முதுகில் குத்தினார். காயமடைந்த கவுசல்யா, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் குறித்து, எம்.கே.பி., நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நேற்று மணிமாறனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை