உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பரங்கிமலை சாலையில் சிக்னல் நேரம் அதிகமாகுமா?

பரங்கிமலை சாலையில் சிக்னல் நேரம் அதிகமாகுமா?

ஆதம்பாக்கம், ஆதம்பாக்கம், உள்ளகரம் - புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளை, வேளச்சேரி - பரங்கிமலை உள்வட்ட சாலை இணைக்கிறது. இரண்டு பகுதிகளிலும் தனியார், அரசு பள்ளிகள் உள்ளதால், தினமும் நுாற்றுக்கணக்கான பள்ளி மாணவ - மாணவியர், உள்வட்ட சாலையை கடந்து செல்ல வேண்டும்.இதற்கான பிரதான வழித்தடமாக ஆதம்பாக்கம், நேரு தெரு உள்ளது. அத்தெரு சாலையில்இருந்து உள்வட்ட சாலையை பீக் ஹவர்சில் கடந்து செல்லும்போது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பிட்ட இடத்தில் சிக்னல் இல்லாததால், இப்பகுதியை கடந்து செல்ல 20 நிமிடங்களுக்கு மேல் ஆனது.இதற்கு தீர்வாக, நேரு தெருவில் இருந்து உள்வட்ட சாலை கடக்கும் பகுதி முழுதும் அடைத்து, சில ஆண்டுகளுக்கு முன் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.நேரு தெருவில் இருந்து உள்வட்ட சாலையில் பயணித்து, புழுதிவாக்கம், பாலாஜிநகர் பிரதான சாலை அருகில் 'யு - டர்ன்' செய்யவும், அதேபோல, உள்ளகரத்தில் இருந்து ஆதம்பாக்கம் செல்வோர், திருமலை நாயக்கர் சாலை அருகே உள்ள உள்வட்ட சாலையில் 'யு - டர்ன்' செய்யும் வகையில் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டது.சில மாதங்களில் இந்த திட்டம் கைவிடப்பட்டதால், மீண்டும் போக்குவரத்து நெரிசலில் பலரும் சிக்கி தவிப்பதாக, நம் நாளிதழில் படத்துடன் கூடிய விரிவான செய்தி வெளியானது. அதன் நடவடிக்கையாக சமீபத்தில் சிக்னல் அமைக்கப்பட்டது.ஆனால், உள்வட்ட சாலையை கடக்கும் சிக்னலில், 20 வினாடிகள் மட்டுமே நேரம் அளிக்கப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே, உள்வட்ட சாலையை கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை கணக்கில் கொண்டு, பள்ளிகள் திறக்கும் முன், சிக்னல் நேரத்தை அதிகரிப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ