உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பைக் மீது லாரி மோதி ஐ.டி., ஊழியர் பலி

பைக் மீது லாரி மோதி ஐ.டி., ஊழியர் பலி

பள்ளிக்கரணை, மதுரை தத்தநேரி பகுதியைச் சேர்ந்த சரவணன், 25. சென்னையில் தங்கி, இ.சி.ஆர்., சாலையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடித்து 10.45 மணி அளவில், மேடவாக்கம்- - மாம்பாக்கம் பிரதான சாலையில், தன் 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். வேங்கைவாசல் டாஸ்மாக் கடை அருகே, பின்னால் வந்த சிமென்ட் கலவை லாரி முந்த முயன்ற போது, பைக்குடன் சரவணன் நிலை தடுமாறி லாரியின் அடியில் சிக்கினார். இதில், சரவணன் மீது லாரியின் பின் சக்கரம் மீது ஏறி இறங்கியதில் அதே இடத்தில் உயிரிழந்தார்.பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்து, சிமென்ட் கலவை வாகனத்தை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை