உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கானுநகர் கோவில் பிரச்னை அறநிலையத்துறை விசாரணை

கானுநகர் கோவில் பிரச்னை அறநிலையத்துறை விசாரணை

சென்னை, விருகம்பாக்கம், கானுநகரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக, நவசக்தி விநாயகர் மற்றும் புத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகத்தை விநாயகர்சதுர்த்தி அன்று நடக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், கோவில் நிர்வாகத்தில் இருப்பவர்களிடையே, தலைவர் பதவி தொடர்பாக இரு கோஷ்டியாக பிரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கோவில் நிர்வாகத்தில் கையாடல், முறைகேடு நடந்துள்ளதாக, மாறி, மாறி புகார் கொடுத்தனர்.இரண்டு தரப்பினரையும் காவல்துறையினரும், மாம்பலம் வட்டாட்சியரும் அழைத்து விசாரணை நடத்தினர். ஆனால், தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில், இப்பிரச்னை தொடர்பான புகார் அறநிலையத்துறைக்கு சென்றது.இது குறித்து, விசாரிக்க கே.கே.நகர் சக்திவிநாயகர் கோவில் செயல் அலுவலர் உஷாவிற்கு உத்தரவிடப்பட்டது.  இதையடுத்து, இரண்டு தரப்பினரையும் நேற்று காலை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பட்டது. கோவில் நிர்வாக கணக்கு வழக்கு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன், இருதரப்பினரும் விசாரணைக்கு ஆஜராகினர். விசாரணையின் அடிப்படையில் அறநிலையத்துறைக்கு அறிக்கை அனுப்பி, நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ