உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோயம்பேடு - ஆவடி பூந்தமல்லி - பரந்துார் மெட்ரோ நீட்டிக்க ஆய்வு

கோயம்பேடு - ஆவடி பூந்தமல்லி - பரந்துார் மெட்ரோ நீட்டிக்க ஆய்வு

சென்னை, சென்னை மெட்ரோ ரயில் சேவையை, புறநகர் பகுதிகளுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி சிறுசேரி - கிளாம்பாக்கம், பூந்தமல்லி - பரந்துார், கோயம்பேடு - ஆவடி இடையே மெட்ரோ ரயில்சேவையை நீட்டிப்பது குறித்து சாத்தியக்கூறு அறிக்கை அளிக்கப்பட்டது. இந்த அறிக்கையில், பூந்தமல்லி - பரந்துார், கோயம்பேடு - ஆவடிக்கு திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்தில் பூந்தமல்லி - பரந்துார் 50 கி.மீ, கோயம்பேடு - ஆவடிக்கு திருமங்கலம், முகப்பேர் வழியாக 17 கி.மீ., மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கு தமிழக அரசின் ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த இரு வழித்தடங்களிலும், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக அளிக்கப்பட்ட முதல்கட்ட ஆய்வு அறிக்கை குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. சுரங்கப்பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் வடிமைப்பு, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைவிடங்கள், பயணிருக்கான வசதிகள் உள்ளிட்ட விபரங்கள் ஆய்வு செய்து, தேவையான மாற்றங்கள் செய்யப்படும். அதன்பிறகு, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து இறுதி செய்து, தமிழக அரசிடம் சமர்பிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ