உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வண்டலுாரில் மருத்துவமனைக்கு வழங்கிய நிலம் திரும்ப பெற்றது செல்லும்: ஐகோர்ட்

வண்டலுாரில் மருத்துவமனைக்கு வழங்கிய நிலம் திரும்ப பெற்றது செல்லும்: ஐகோர்ட்

சென்னை, வண்டலுார் அருகே மருத்துவமனை அமைக்க அரசு நிலத்தை தனியார் அறக்கட்டளைக்கு ஒதுக்கீடு செய்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து அரசு பிறப்பித்து அரசாணை செல்லும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வில்லிவாக்கத்தை சேர்ந்த ஜி.ஆரோன் தேவதாஸ் தாக்கல் செய்த மனு:பெருங்களத்துார் பகுதியில், வேளாண் துறைக்கு சொந்தமான 20 ஏக்கர் அரசு நிலம், 1969ல் ஏக்கர் 300 ரூபாய் வீதம், ஆரோன் சாமுவேல் மருத்துவமனை சொசைட்டிக்கு ஒதுக்கப்பட்டது.

சட்ட விரோதமானது

ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்க, மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டது.பின், அந்த நிலத்துக்கு 60,000 ரூபாய் செலுத்தப்பட்டது. வண்டலுார் பகுதியில் மிருகக்காட்சி சாலை அமைக்க, எங்களுக்கு வழங்கிய நிலத்தை திரும்ப எடுத்த அரசு, அதற்கு பதில் வனத்துறைக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தை 1975ல் ஒதுக்கியது.அந்த நிலத்தில், சில பகுதிகளை வனத்துறையே ஆக்கிரமித்து, மரக்கன்றுகளை நட்டுள்ளது.இதை அகற்ற கோரியும், வனத்துறை கண்டுகொள்ளவில்லை. மருத்துவமனை அமைக்க தடையில்லா சான்று வழங்க மறுத்த வனத்துறை, எங்களுக்கு ஒதுக்கீடு செய்த நிலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் 5 ஆண்டுகளுக்குள் மருத்துவமனை அமைக்கவில்லை எனக்கூறி, அரசு 2009ல் நிலத்துக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்து அரசாணை பிறப்பித்தது. இது, சட்ட விரோதமானது.வனத்துறை நட்ட மரக்கன்றுகளை அகற்றாதது, தடையில்லா சான்று வழங்காததது போன்ற காரணங்களால், திட்டமிட்டபடி மருத்துவமனை கட்டும் பணிகளை எடுக்க முடியவில்லை. நில ஒதுக்கீட்டை ரத்து செய்த தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து, நிலத்தை மருத்துவமனை அமைக்க மீண்டும் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன் விசாரணைக்கு வந்தது.

மனு தள்ளுபடி

அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.ரமன்லால் ஆஜராகி, 'மருத்துவமனை கட்டுவதாக கூறி, மனுதாரர் சங்கம் பெற்ற 20 ஏக்கர் அரசு நிலத்தில் எந்த பணியும் துவக்கப்படவில்லை. எனவே, நில ஒதுக்கீட்டை ரத்து செய்து அரசு உத்தரவிட்டது. 'எந்தவொரு விதிமீறல் இல்லை என்பதால், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றார்.இதையடுத்து, 'சங்கத்துக்கு வழங்கிய 20 ஏக்கர்நிலத்துக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்து, அரசு பிறப்பித்த உத்தரவில் எந்த விதிமீறல் இல்லை' எனக்கூறிய நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை