உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பீர் குடித்தபடி காரில் பயணம் சட்ட கல்லுாரி மாணவர் கைது

பீர் குடித்தபடி காரில் பயணம் சட்ட கல்லுாரி மாணவர் கைது

துரைப்பாக்கம், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், ஒரு காரின் கூரையை திறந்து பீர் குடித்தபடி வாலிபரும், இளம்பெண்ணும் பயணித்தனர்.அவர்கள் பெருங்குடியை சேர்ந்த சஞ்சய், 23, என்பதும், அவர், தனியார் கல்லுாரியில் ஐந்தாம் ஆண்டு சட்டம் படித்து வருவதும் தெரியவந்தது.இதையடுத்து துரைப்பாக்கம் போலீசார், பொதுமக்கள் பாதையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது, குடித்துவிட்டு பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடப்பது ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிந்தனர். சஞ்சய்யை கைது செய்த போலீசார், அந்த காரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

வாய்மையே வெல்லும்
ஆக 03, 2024 07:27

படிக்கும்போதே மது மாது... என்ன படிப்பு .. சட்டம்.. விளங்கிடும் படிப்பும் படிப்புக்கு நீங்க கொடுக்கும் மரியாதையும் ..மக்களை குடுக்காரனாகி அசிங்கப்படுத்துது . மதுவால் எத்தனை உயிர் போகபோதோ.. எத்தினி வீட்டில் தாலியறுப்பு தொடருமோ ?? அரசு நடவடிக்கை கண்டிக்கத்தக்க விடயம் ..


Mani . V
ஆக 03, 2024 07:19

இந்த ரௌடியெல்லாம் சட்டம் படித்து நாட்டில் சட்டம், ஒழுங்கை காப்பாற்றி விடுவானாக்கும்?


Mani . V
ஆக 03, 2024 05:58

இந்த நாயெல்லாம் வாழ்நாள் முழுவதும் ஓட்டுநர் உரிமம் வாங்க முடியாதபடி செய்யணும். எது, சட்டம் அனைவருக்கும் சமம் இல்லையா? பணக்காரர்களுக்காக வளைந்து, நெளிந்து போகுமா? நேற்று ஒரு குடிகாரனின் வண்டியில் பயணம் செய்த மூன்று இளம்பெண்கள் பலியானார்கள். அப்படியும் இந்தப் பெண்கள் திருந்துவது மாதிரி தெரியவில்லை.


மேலும் செய்திகள்