உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தண்ணீர் பிடித்து தராதவரை கொன்ற ரவுடிக்கு ஆயுள்

தண்ணீர் பிடித்து தராதவரை கொன்ற ரவுடிக்கு ஆயுள்

சென்னை, சென்னை, ஜாபர்கான்பேட்டை அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் சங்கர், 43. இவர், கடந்த 2021 அக்., 3ல் எம்.ஜி.ஆர்.நகர் அண்ணா பிரதான சாலையில் உள்ள மார்க்கெட் பேருந்து நிறுத்தம் அருகே படுத்து துாங்கி உள்ளார்.அருகே, ரவுடி செல்வக்குமார், 34 என்பவரும், அவரது நண்பர்களும் மது குடித்தனர். அப்போது, அங்கு துாங்கி கொண்டிருந்த சங்கரை எழுப்பி, அருகில் இருந்த குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் பிடித்து வரும்படி செல்வகுமார் கூறியுள்ளார். அதற்கு மறுத்ததால் ஏற்பட்ட தகராறில், சங்கரை தாக்கி ரவுடி செல்வகுமார் கொலை செய்தார். ரவுடி செல்வக்குமாரை கைது செய்து, எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள 16 வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எல்.அபிரகாம் லிங்கன் முன் வழக்கு விசாரணை நடந்தது. போலீசார் தரப்பில், மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.மகாராஜன் ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி, செல்வகுமார் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என கூறி, அவருக்கு ஆயுள் தண்டனையும், 5,000 ரூபாய் ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை