உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண் போலீசை மிரட்டிய ஆசாமி கைது

பெண் போலீசை மிரட்டிய ஆசாமி கைது

செம்பியம், செம்பியம் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்தவர் பெண் காவலர் சுவாதி, 24. இவர், நேற்று காலை 8:45 மணியளவில் பெரம்பூர் - மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள சினிமா தியேட்டர் அருகே, போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை, அகற்றும்படி டிரைவரிடம் கூறினார்.மதுபோதையில் இருந்த வியாசர்பாடி, கருணாநிதி சாலையைச் சேர்ந்த பழைய குற்றவாளியான ஆட்டோ டிரைவர் பிரவீன், 22, பெண் காவலரை தகாத வார்த்தைகளால் பேசி, மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, விசாரித்த செம்பியம் போலீசார் நேற்று பிரவீனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை