உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இருளில் மூழ்கியுள்ள மேடவாக்கம் மேம்பாலம்

இருளில் மூழ்கியுள்ள மேடவாக்கம் மேம்பாலம்

மேடவாக்கம், மேடவாக்கம் சந்திப்பில் உள்ள இரண்டு மேம்பாலங்களிலும், கடந்த ஓராண்டாக, மின் விளக்குகள் எதுவும் எரியவில்லை. வாகன ஓட்டிகள் கூறியதாவது:பள்ளிக்கரணை அடுத்த மேடவாக்கம் சந்திப்பில் நிலவிய போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்த தீர்வாக, அங்கு இரண்டு மேம்பாலங்கள் கட்டப் பட்டு, கடந்த 2022ல் திறக்கப்பட்டன.இரவு நேரத்தில் போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, மேம்பாலங்களின் இரு புறங்களிலும், 150க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு, அதில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, ஒளிர்ந்தன.ஆனால், கடந்த ஓராண்டுக்கும் மேலாக மேம்பாலத்தில் மின்விளக்குகள் எதுவும் எரிவதில்லை. இதனால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். இருள் நிறைந்த பகுதியாக உள்ளதால், சமூக விரோத செயல்களும் அரங்கேறி வருகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, எரியாமல் உள்ள அனைத்து மின்விளக்குகளையும் ஒளிரச் செய்து, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ