உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மருத்துவ மாணவர் முகத்தை கிழித்து வழிப்பறி கொள்ளை

மருத்துவ மாணவர் முகத்தை கிழித்து வழிப்பறி கொள்ளை

ஓட்டேரி, ஓட்டேரியை சேர்ந்தவர் அக்கிலு ஜாமா, 22. இவர் பெங்களுரூவில் உள்ள ஹோமியோபதி மருத்துவ கல்லுாரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். ஒரு வாரம் விடுமுறையில், சென்னைக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், நண்பரை பார்ப்பதற்காக பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே பைக்கில் சென்றுள்ளார்.அப்போது ஆட்டோவில் வந்த இரண்டு ரவுடிகள், அக்கிலுவிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் பணம் இல்லை என்றதும், மொபைல்போனை பிடுங்க முயன்றனர். ஆனால், அக்கிலு மொபைல்போனை காப்பாற்ற போராடினார். ஆட்டோவில் வந்தவர்கள் கத்தியால் அக்கிலுவின் முகத்தில் தாக்கிவிட்டு தப்பினர்.இதில் வலது கண்ணில் வெட்டு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்கிலுவுக்கு முகத்தில் ஏழு தையல்கள் போடப்பட்டன. சம்பவம் குறித்து செம்பியம் காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது. 'சிசிடிவி' பதிவுகளின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை