உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மர்ம உறுப்பை வெட்டி ஓட்டேரி வாலிபர் கொலை

மர்ம உறுப்பை வெட்டி ஓட்டேரி வாலிபர் கொலை

ஓட்டேரி, ஓட்டேரி, பி.எஸ்.மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சிராஜ், 30. இவர், நேற்று மதியம் ஓட்டேரி, பழைய மாநகராட்சி கட்டடத்தின் உள்ளே இம்ரான், 30, மற்றும் முகமது கலீல், 28, ஆகியோருடன் மது அருந்தியுள்ளார்.அப்போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில், சிராஜ் கத்தியை எடுத்து, இம்ரான் மற்றும் முகமது கலீலை வெட்டி விடுவதாக மிரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த இம்ரானும், முகமது கலீலும், மதுபோதையில் கத்தியை பிடுங்கி சிராஜின் கழுத்தில் வெட்டியதுடன் அவரது மர்ம உறுப்பையும் வெட்டி வீசினர். பின், ஆட்டோவில் ஏறி, ஓட்டேரி காவல் நிலையத்தில் கத்தியுடன் சரண் அடைந்துள்ளனர்.உடலை மீட்டு, இருவரையும் கைது செய்தனர். போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஓட்டேரி, மகாலட்சுமி தியேட்டரில் 10 நாட்களுக்கு முன் படம் பார்த்த போது, கொலையான சிராஜுக்கும், இம்ரான் உள்ளிட்டோருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சிராஜ், முகமது கலீலின் தாயை பற்றி அவதுாறாக பேசியுள்ளார். இதில் ஆத்திரமடைந்தவர்கள் சிராஜை கொலை செய்தது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ