உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை மாத்திரை வாலிபர் மயக்கம்

போதை மாத்திரை வாலிபர் மயக்கம்

திருவொற்றியூர்,தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் சதாம் உசேன், 27, இவரது நண்பர் மதன், 26. இருவரும், நேற்று முன்தினம் இரவு, திருவொற்றியூர் - இந்திரா நகர், கரிமேடு பகுதி, காலி மைதானத்திற்கு வந்துள்ளனர். வாய்வழியாக உட்கொள்ளக்கூடிய போதை மாத்திரையை தண்ணீரில் கலந்து, ஊசி வழியாக இருவரும் உடம்பில் செலுத்திக் கொண்டு உள்ளனர். இதில், சதாம் உசேன் மயங்கி விழுந்து உள்ளார்.அவரது குடும்பத்தினருக்கு இதுகுறித்து மதன் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் விரைந்து வந்து, சதாம் உசேனை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனை தகவலின்படி, திருவொற்றியூர் போலீசார் சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதுடன், போதை மாத்திரை சப்ளை செய்தவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை