உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேசிய யு - 17 ஓபன் செஸ் சிறுமி சாம்பியன்

தேசிய யு - 17 ஓபன் செஸ் சிறுமி சாம்பியன்

சென்னை, மத்திய அரசின் ஆதரவில், அகில இந்திய செஸ் கூட்டமைப்பு மற்றும் சண்டிகர் செஸ் சங்கம் சார்பில், தேசிய அளவிலான ஓபன் செஸ் போட்டி, சண்டிகர் மாநிலத்தில் நடந்தது.சிறுமியருக்கான யு - 17 எனும் போட்டியில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீராங்கனையர் பங்கேற்றனர். இதில், தமிழ்நாடு செஸ் கூட்டமைப்பு மற்றும் திருவள்ளூர் மாவட்ட செஸ் சங்கம் சார்பில், தமிழக வீராங்கனையாக சிறுமி தேஜஸ்வினி பங்கேற்றார்.போட்டிகள், 'பிடே' விதிப்படி,'சுவிஸ்' அடிப்படையில் நடந்தன. இதில், 11 சுற்றுகள் முடிவில், தேஜஸ்வினி எட்டு புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து, சாம்பியன் பட்டம் வென்றார்.அவரைத் தொடர்ந்து, தெலுங்கானா வீராங்கனை கிருத்திகா, கேரளாவைச் சேர்ந்த அணுபம் ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை