| ADDED : ஜூலை 18, 2024 12:41 AM
கோபாலபுரம்,நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, வடக்கு கோபாலபுரம், இரண்டாவது தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தைச் சுற்றி, தடுப்பு வலைகள் அமைக்கப்பட்டுள்ளன.தேனாம்பேட்டை மண்டலம், வடக்கு கோபாலபுரம் இரண்டாவது தெருவில், எந்தவித தடுப்பு வலையும் அமைக்காமல், இரண்டு ஆண்டுகளாக கட்டடம் கட்டும் பணி நடந்து வந்தது.இதனால் கட்டடத்தை சுற்றி வசிப்போர், துாசியால் பகலில் கூட ஜன்னலை திறக்க முடிவதில்லை. அங்கு வசிக்கும் முதியவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வந்தது.கட்டடம் கட்டி வரும் ஒப்பந்ததாரரும், தெருவை ஆக்கிரமித்து கட்டுமானப் பொருட்களை வைத்திருந்தார். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர், முதல்வர் தனிப்பிரிவு உள்ளிட்டவற்றில், அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதுகுறித்து நம் நாளிதழில், புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து, மாநகராட்சி உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட கட்டட ஒப்பந்ததாரர், கட்டடத்தை சுற்றி தடுப்பு வலைகள் அமைத்துள்ளார்.