உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பயணியரிடம் போன் திருடிய வடமாநில வாலிபர்கள் கைது

பயணியரிடம் போன் திருடிய வடமாநில வாலிபர்கள் கைது

அமைந்தகரை, சென்னை, அமைந்தகரை ஸ்கைவாக் அருகே, அமைந்தகரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த நான்கு பேரை மடக்கி சோதனை செய்தனர். அவர்களிடம் இருந்த மொபைல் போன்கள் குறித்து விசாரித்த போது, திடீரென ஒரு ஆட்டோவில் ஏறி நான்கு பேரும் தப்பி சென்றனர். இதையடுத்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆட்டோ ஓட்டுனருக்கு சந்தேகம் ஏற்படவே, அமைந்தகரை காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றார். இதையடுத்து, ஆட்டோவில் வந்த இருவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.விசாரணையில், பிடிபட்டவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த விஷால் குமார், 22 மற்றும் பாண்டுநைனா, 24 என தெரியவந்தது. இவர்கள் ஜார்க்கண்ட்டில் இருந்து நேற்று முன்தினம் ரயிலில் சென்னைக்கு வந்த போது, பயணியரிடம் இருந்து ஐந்து மொபைல் போன்களை திருடியதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகுல் கார்ஜி, 20. சென்னையில் கல்லுாரியில் படிக்கும் தங்கையை பார்ப்பதற்காக, நேற்று காலை, 5:00 மணியளவில் கோரமண்டல் விரைவு ரயிலில் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார். ரயில் நிலையத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த போது, அவரது போனை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த தினேஷ், 38 என்பவர் திருட முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திருடியவரை மடக்கிப்பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை