உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பைக்குகளை திருடி விற்ற பழைய குற்றவாளி கைது

பைக்குகளை திருடி விற்ற பழைய குற்றவாளி கைது

புழல், சென்னை, புழல் மத்திய சிறை, காவாங்கரை மீன் மார்க்கெட், டாஸ்மாக் கடை, வங்கி ஆகியவற்றின் அருகே வாடிக்கையாளர்கள் நிறுத்தும் 'பைக்'குகள் அடிக்கடி திருடு போயின.இது குறித்த புகார்களின்படி, திருடர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கண்காணிப்பு கேமரா காட்சிகள் வாயிலாக, குற்றவாளியை தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம், காவாங்கரை மீன் மார்க்கெட் அருகே, பைக்குகளை நோட்டமிட்ட நபரை, போலீசார் பிடிக்க முயன்றனர். தப்பி ஓடிய அவரைப் பிடித்து விசாரித்ததில், செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளியான முருகன், 37, என தெரிந்தது.இவர் பைக்குகளை திருடி, உதிரிபாகங்களாக பிரித்து விற்று, அதில் கிடைக்கும் பணத்தில் சொகுசாக வாழ்ந்து வந்துள்ளார். அவரை கைது செய்து, வீட்டை சோதனையிட்ட போலீசார், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 பைக்குகளின் இன்ஜின்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை