உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆவடி நகைக்கடை கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது

ஆவடி நகைக்கடை கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது

ஆவடி, ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, எல்லையம்மன் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ், 33; வீட்டின் கீழ்த்தளத்தில் நகைக்கடை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த மார்ச் 15ம் தேதி, இவரது கடைக்கு வந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் பிரகாஷை மிரட்டி, 2.5 கிலோ தங்க நகை, வெள்ளி நகை மற்றும் 5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.இது குறித்து, ஆவடி முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, எட்டு தனிப்படை அமைத்து, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த வழக்கில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளனர். அவர்களிடம் இருந்து, 1 கிலோ தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி, 70,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன.இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த போரா ராம், 42, என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து 238 கிராம் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், சென்னை மாங்காடில் வசிக்கும் இவர், நகைக்கடையை வேவு பார்த்து உதவியதோடு, கொள்ளையிட்ட பின் தனக்கான பங்கு பெற்றது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்