ஐ.டி., நிறுவனத்தில் போன்கள் திருடியோர் கைது
செம்மஞ்சேரி, சோழிங்கநல்லுாரில் செயல்படும் ஒரு ஐ.டி., நிறுவனத்தில், சில நாட்களுக்கு முன், 20க்கும் மேற்பட்டோரின் மொபைல் போன்கள் திருடுபோயின. செம்மஞ்சேரி போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தபோது, சோழிங்கநல்லுாரைச் சேர்ந்த பிரதீப், 25, சூர்யா, 22, என்பது தெரிந்தது.நேற்று, இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து, 12 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இருவரும், ஐ.டி., நிறுவனத்திற்குள் எப்படி புகுந்தனர் என, போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.