உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையில் பாயும் கழிவுநீரால் மயிலாப்பூரில் சீர்கேடு

சாலையில் பாயும் கழிவுநீரால் மயிலாப்பூரில் சீர்கேடு

சாலையில் பாயும் கழிவுநீரால் மயிலாப்பூரில் சீர்கேடு

தேனாம்பேட்டை மண்டலம், 121 வது வார்டு, மயிலாப்பூரில், வீரபெருமாள் கோவில் தெருவில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.இங்கு, குடிநீர் வாரியத்தின் கழிவுநீர் இணைப்பில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, தெரு முழுவதும் கழிவுநீர் பாய்கிறது. சாலையில் வழிந்தோடும் இந்த கழிவுநீர், 200 மீட்டர் துாரத்திற்கு ஆறு போல் பாய்ந்து, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக ஓடுகிறது. இதனால், அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய்தொற்று அபாயம் நிலவுகிறது. புகார் அளித்தாலும், குடிநீர் வாரியம் அலட்சியமாக செயல்படுகிறது. சட்டவிரோத இணைப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் பணியாற்றுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து, நிரந்த தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அண்ணாதுரை, 56, மயிலாப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை