உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெத்தனத்தில் வெள்ளி விழா பிரகாஷ் நகர் சாலை படுமோசம்

மெத்தனத்தில் வெள்ளி விழா பிரகாஷ் நகர் சாலை படுமோசம்

திருநின்றவூர், திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு, பிரகாஷ் நகர் 14வது குறுக்கு தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளாக இங்குள்ள சாலை, மண் தரையாக உள்ளது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இது குறித்து அப்பகுதிவாசிகள் பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையில், இந்த சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.எனவே, சம்பந்தப்பட்ட திருநின்றவூர் நகராட்சி அதிகாரிகள், அப்பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.இந்த சாலை குறித்த படங்கள்,'வெள்ளி விழா கொண்டாடிய சாலை'யென சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இதுகுறித்து பகுதி வார்டு உறுப்பினரிடம் கேட்ட போது, 'தேர்தல் நன்னடத்தை காரணமாக நிதி ஒதுக்கியும், 'டெண்டர்' விடாமல் இருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கப்பட்டதால், விரைவில் சாலை அமைப்பதற்கான பணிகள் துவங்கும்' எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை