உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காரில் மடிக்கணினி திருடிய ராம்ஜி நகர் கொள்ளையன் கைது

காரில் மடிக்கணினி திருடிய ராம்ஜி நகர் கொள்ளையன் கைது

அடையாறு,கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் நித்யா, 48. இவர், அங்குள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப கல்லுாரி இணைப்பேராசிரியர்.சில நாட்களுக்கு முன் அடையாறு பேருந்து நிலையம் பின்புறம் காரை நிறுத்தி, அருகில் உள்ள அழகு நிலையம் சென்றார். திரும்பி வந்தபோது, காரின் கண்ணாடியை உடைத்து மடிக்கணினி, பைகள் திருடுபோனது தெரிந்தது. இது குறித்த புகாரை, அடையாறு போலீசார் விசாரித்து வந்தனர்.இதில், திருச்சி, ராம்ஜி நகர் கொள்ளையரின் கைவரிசை என்பது தெரிய வந்தது. அக்கொள்ளையில் தொடர்ந்து ஈடுபடும் பிரதீப், 39, அவரது கூட்டாளி உதயகுமார், 39, கைவரிசை காட்டியதும் உறுதியானது.சென்னையில் பதுங்கி இருந்த பிரதீப்பை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து நித்யாவின் மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டது.கைதான பிரதீப் டிப்ளமா படித்தவர். பல ஆண்டுகளாக திருட்டு தொழில் செய்து வருகிறார். இவர் மீது, தமிழகம் மட்டுமின்றி டில்லி, மும்பை, ஹைதராபாத் என நாடு முழுதும், பல்வேறு நகரங்களில் திருட்டு வழக்குகள் பதிவாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை